
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கோவை அதிமுக சார்பில் அவினாசி சாலையில் உள்ள ஜெயலலிதாவின் உருவச்சிலைக்கு மாநகர மாவட்டச் செயலாளர் பி.ஆர்.ஜி அருண்குமார், எம்.எல்.ஏ ஆர்.குட்டி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து இதயதெய்வம் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதேபோல் அதிமுக தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அம்மன் அர்ச்சுனன் மலர்தூவி மரியாதை செலுத்திவிட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
சுங்கம் பகுதியிலுள்ள அரசுப் போக்குவரத்து கழக பணிமனை முன்பு தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வேலுசாமி கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். மேலும், பல்வேறு பகுதிகளில் அன்னதானம் கொடியேற்றுதல் போன்ற நிகழ்ச்சிகளில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் முன்னாள் அமைச்சர் வேலுசாமி தலைமையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.