கர்நாடக மாநில பப்ளிக் சர்வீஸ் கமிஷன் செயலாளர் காரை திருடிய இரு வெளிநாட்டு வாலிபர்கள் சிதம்பரத்தில் கைது

கர்நாடக மாநில பப்பளிக் சர்வீஸ் கமிஷண் செயலாளர் காரை திருடிய இரு வெளிநாட்டு வாலிபர்களை சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸார் கைது செய்தனர்.
வெளிநாட்டு வாலிபர்கள் கைது
வெளிநாட்டு வாலிபர்கள் கைது
Published on
Updated on
1 min read

சிதம்பரம்: கர்நாடக மாநில பப்பளிக் சர்வீஸ் கமிஷண் செயலாளர் காரை திருடிய இரு வெளிநாட்டு வாலிபர்களை சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சித்தலப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (54) இவர் கடந்த பிப்.22 ஆம் தேதி நள்ளிரவு தனது வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு 2 சொகுசு கார்களில் வெளிநாட்டினர் 4 பேர் நின்று பேசிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த ராமலிங்கம் இந்த நேரத்தில் உங்களுக்கு இங்கு என்ன வேலை என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த 4 பேரும் ராமலிங்கத்தை தகாத வார்த்தைகளால் ஆங்கிலத்தில் திட்டி உள்ளனர். மேலும் ராமலிங்கத்தின் வீட்டுக்குச் சென்று அவரது பைக்கை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதையடுத்து ராமலிங்கம் சத்தம் போட்டுள்ளார். உடனே அந்த நான்கு பேரும் 2 சொகுசு கார்களையும் விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து ராமலிங்கம் சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் அண்ணாமலைநகர் காவல் நிலைய ஆய்வாளர் தேவேந்திரன் தலைமையிலான போலீசார் விசாரணை செய்து 2 சொகுசு கார்கைளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தப்பி ஓடியவர்கள், குறித்து தீவிர விசாரணை நடத்தினர். வெளிநாட்டினர் வந்த ஒரு சொகுசு கார் கர்நாடக மாநிலத்தின் பதிவு எண் (KA 01G 6499)கொண்டது என்றும் அந்தக் காரை திருடி வந்தது தெரிய வந்தது.

இந்நிலையில் அண்ணாமலைநகர் போலீசாரால் கைப்பற்றப்பட்ட இனோவா சொகுசு கார், கர்நாடக மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் ஶ்ரீகாந்தின் கார் என்பது தெரிய வந்தது. கர்நாடக மாநிலத்திலிருந்து அந்தக் காரைத்  திருடி கொண்டு வந்ததுள்ளனர். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு கார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சிதம்பரம் முத்தையா நகரில் தங்கியிருந்த தெற்கு சூடான் நாட்டைச் சேர்ந்த இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

அவர்களை விசாரணை செய்ததில் காரை திருடியது அகஸ்டின் கிராஸ் பிரான்சிஸ் (26) மற்றும் எலியா அமின் எலியா (27) ஆகியோர் என்பது தெரிய வந்தது.  இவர்களில் ஒருவர்  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்த முன்னாள் மாணவர் என்பதும், மற்றொருவரான அமின் எலியா தற்போது அண்ணாமலை பல்கலைக்கழத்தில் எம்ஏ படித்து வருகிறார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com