தமிழக தர்பார்: ரஜினி ரசிகர்களின் கட்-அவுட் பரபரப்பு

மணப்பாறையில் நடிகர் ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம் வெளியாகும் திரையரங்கத்தில் தமிழக அரசு தலைமைச் செயலகம் - 2021 தமிழக தர்பார் என வைக்கப்பட்டுள்ள கட்-அவுட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக தர்பார்: ரஜினி ரசிகர்களின் கட்-அவுட் பரபரப்பு
Updated on
1 min read

மணப்பாறையில் நடிகர் ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம் வெளியாகும் திரையரங்கத்தில் தமிழக அரசு தலைமைச் செயலகம் - 2021 தமிழக தர்பார் என வைக்கப்பட்டுள்ள கட்-அவுட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசியலில் சிஸ்டம் சரியில்லை, ஆளுமைமிக்க தலைமையிடம் காலியாக உள்ளது. விரைவில் அரசியல் கட்சி தொடக்கம் குறித்து அறிவிப்பேன் என கடந்த சில ஆண்டுகளாக கர்ஜனை செய்து வரும் நடிகர் ரஜினிகாந்த், அரசியலில் எடுக்கும் நடவடிக்கைகளை விட கடந்த சில மாதங்களாகவே படம் வெளியிடுவதில் தான் அதிக கவனம் செலுத்தி வருவதாக தமிழக மக்கள் விமர்சித்துள்ளனர். 

லைகா நிறுவன தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பொங்கல் வெளியீடாக ரஜினிகாந்தின் 167–வது திரைப்படமான தர்பார் ஜனவரி 9-ஆம் தேதி உலகமெங்கும் 5,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. இதற்காக ரஜினி மக்கள் மன்றங்கள் சார்பில் திரைப்படத்தை வரவேற்கும் விதமாக பல்வேறு விளம்பர பேனர்கள், சுவரொட்டிகள், தோரணங்கள் என களைகட்டி வருகிறது.

இந்த நிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தர்பார் படம் வெளியிடப்படும் இந்திரா திரையரங்கத்தில் மணப்பாறை நகர ரஜினி மக்கள் மன்றம் சார்பில் “தமிழக அரசு தலைமைச் செயலகம் - 2021 தமிழக தர்பார்” என தமிழக அரசு முத்திரையுடன் தலைமைச் செயலகம் வடிவத்தில் கட்-அவுட் அமைக்கப்பட்டு அதில் ரஜினிகாந்த் நின்று மக்களை சந்திப்பது போன்ற வடிவமைப்புகள் செய்யப்பட்டுள்ளது. 

ரஜினிகாந்த் அரசியலில் முழுமையாக வருவாரா? கட்சி தொடங்குவாரா? என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் 2021 ரஜினி தர்பார் தலைமைச் செயலகத்தில் இருக்கும் என்பது போல் ரஜினி மக்கள் மன்றத்தினர் அமைத்துள்ள பேனர் மணப்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com