மணப்பாறையில் சாலை மறியல்: 88 பெண்கள் உட்பட 216 தொழிற்சங்கத்தினர் கைது.

மணப்பாறையில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட  88 பெண்கள் உட்பட 216 தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.
சாலை மறியல்
சாலை மறியல்
Updated on
1 min read

மணப்பாறை: மணப்பாறையில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட  88 பெண்கள் உட்பட 216 தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் தொழிற்சங்கங்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மத்திய அரசின் தொழிலாளர் விரோதப்போக்கை கண்டித்தும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், அனைத்திந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு, இந்திய தொழிற்சங்க மையம், தொழிலாளர் முன்னேற்ற சங்கம், மறுமலர்ச்சி தொழிலாளர் கூட்டமைப்பு சங்கம் ஆகியவற்றின் சார்பில் நூற்றுக்கணக்கானோர் காமராஜர் சிலை பகுதியிலிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களை, போலீஸார் தடுத்து நிறுத்திய நிலையில் மணப்பாறை – திண்டுக்கல் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சிலர் சாலையில் படுத்தும் போராட்டம் செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 68 பெண்கள் உட்பட 154 தொழிற்சங்கத்தினரை போலீஸார் கைது செய்தனர்.

அதேபோல் வையம்பட்டி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட 17 பெண்கள் உட்பட 53 தொழிற்சங்கத்தினரையும், துவரங்குறிச்சி பேருந்து நிலையப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 29 தொழிற்சங்கத்தினரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com