தொண்டர்கள்தான் எனது முதல் கடவுள்: பொங்கல் விழாவில் விஜயகாந்த் பேச்சு

எனக்காக பிரார்த்தனை செய்யும் தொண்டர்கள்தான் எனது முதல் கடவுள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தொண்டர்கள்தான் எனது முதல் கடவுள்: பொங்கல் விழாவில் விஜயகாந்த் பேச்சு
Updated on
1 min read

எனக்காக பிரார்த்தனை செய்யும் தொண்டர்கள்தான் எனது முதல் கடவுள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை கொரட்டூரில் தேமுதிக சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினர். 

இவ்விழாவில் பேசிய விஜயகாந்த், தமக்காக பிரார்த்தனை செய்யும் தொண்டர்கள்தான் தமது முதல் கடவுள் என்று தெரிவித்தார். மேலும் விரைவில் பூரண உடல்நலம் பெற்று மீண்டும் வருவேன் என்று கூறியதோடு, தேமுதிக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.

விழாவில் பேசிய பிரேமலதா, 'நமது நாடு எந்த நாடாக இருந்தாலும் இந்துக்களும் இஸ்லாமியர்களும் சகோதரததுவத்துடன் வாழ்கின்றனர். அவர்களிடையே பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் வகையில் தீவிரவாத செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது. அடுத்து வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக அதிக இடங்களை கைப்பற்ற தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com