மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள்

மணப்பாறையில் அஞ்சல் துறையால் மக்களுக்கு விநியோகம் செய்யப்படாத கடிதங்கள் குவியல் குவியலாகக் குப்பையில் வீசப்பட்டுக் கிடந்தன.
மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள்
Updated on
1 min read

மணப்பாறையில் அஞ்சல் துறையால் மக்களுக்கு விநியோகம் செய்யப்படாத கடிதங்கள் குவியல் குவியலாகக் குப்பையில் வீசப்பட்டுக் கிடந்தன.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கோவில்பட்டி சாலையில் உள்ள தனியார் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் குப்பையோடு குப்பையாக குவியல் குவியலாகக் கடிதங்கள் கிடப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். 

இதுகுறித்துக் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். இந்தக் கடிதங்கள் அனைத்தும் கல்வி நிலையங்கள், மாவட்ட ஆட்சியரகம் சார்ந்தவையாகவே இருந்தன. அனைத்து அஞ்சல்களும் முத்திரை வில்லைகள் ஒட்டப்பட்டு, அஞ்சலக நாள்குறிப்பு அச்சு பதிக்கப்பட்டும் இருந்தன. 

மக்களுக்கு விநியோகம் செய்யப்படாத அரசுப் பணி மற்றும் அனைத்து துறையைச் சேர்ந்த அவசர கால அரசு கடிதங்கள் உரியவர்களிடம் சென்றடையாமல் இவ்வாறு குப்பைகளில் வீசப்பட்டுள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காவல்துறையினர் இந்தக் கடிதங்களைச் சேகரித்து அவை எங்கிருந்து வந்தன? யார் குப்பையில் போட்டது? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com