

சென்னை: கடந்த 2014-ஆம் ஆண்டு நடிகர் ரஜினிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை வருமான வரித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் வாபஸ் பெற்றுள்ளது.
கடந்த 2002 முதல் 2005 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் வருமான வரியை முறையாகக் கட்டவில்லை என்று குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை , அவருக்கு ரூ 66.22 லட்சம் அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பியது.
தனக்கு அளிக்கப்பட்ட நோட்டீசை எதிர்த்து ரஜினிகாந்த் வருமான வரித்துறை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் நோட்டீஸை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து வருமான வரித்துறை 2014-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை வருமான வரித்துறை தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வாபஸ் பெற்றுள்ளது.
வழக்கை திரும்பப் பெற அனுமதித்து வருமான வரித்துறை மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.