மாணவர்களை நீண்ட தொலைவு ஓட விட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்!

ஆலங்குளத்தில் அரசுப்பேருந்து ஒன்று பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் பள்ளி மாணவர்கள் நீண்ட தூரம் ஓடி பேருந்தில் ஏறியுள்ளனர்.
மாணவர்களை நீண்ட தொலைவு ஓட விட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்!

ஆலங்குளத்தில் அரசுப்பேருந்து ஒன்று பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் பள்ளி மாணவர்கள் நீண்ட தூரம் ஓடி பேருந்தில் ஏறியுள்ளனர்.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி மாணவர்கள் பள்ளிக்கு அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கின்றனர்.

ஆனால், இலவச பயணம் என்பதால் பேருந்துகளில் பல நடத்துனர்கள் மாணவர்களிடையே முறையாக நடந்துகொள்வதில்லை என்ற புகார்கள் வந்த வண்ணமே உள்ளன. பல பேருந்துகள் பேருந்து நிறுத்தத்தில் கூட நிற்காமல் செல்கின்றன. இதனால் மாணவர்கள் அடுத்த பேருந்துக்காக பல மணி நேரம் காத்திருக்கும் சூழ்நிலை உருவாகிறது. மேலும், நடத்துனர்கள் மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டுகின்றனர்.

இந்நிலையில், தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் மாணவர்களை நீண்ட தூரம் ஓடவிட்டு ஏற்றிச் சென்றுள்ளார் பேருந்து ஓட்டுநர் ஒருவர். ஆலங்குளத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்து நிறுத்தத்தில் நிற்பதைப் பார்த்தும் பேருந்தை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனால் பேருந்தில் ஏறும் முயற்சியில் மாணவர்கள் நீண்ட தூரம் ஓடினர். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் சிலர் பேருந்தை நிறுத்தி மாணவர்களை ஏறச் செய்துள்ளனர். இந்தக் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகியுள்ளது. 

இலவச பிரயாணம் தானே என நடத்துனர் தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் அந்த மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோர்கள், மாணவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com