வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

அழிக்கப்பட்ட சில சிசிடிவி காட்சிகள் மீட்கப்பட்டன: சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர்

சாத்தான்குளம் தந்தை - மகன் இரட்டைக் கொலை வழக்கில், காவல்நிலையத்தில் அழிக்கப்பட்ட சில சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளன என்று சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் தெரிவித்துள்ளார்.

News image
சாத்தான்குளம் தந்தை மகன் இறப்பு விவகாரம்: சிபிசிஐடி விசாரணை தொடக்கம்
Updated On :3 ஜூலை 2020, 6:24 am

DIN


சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை - மகன் இரட்டைக் கொலை வழக்கில், காவல்நிலையத்தில் அழிக்கப்பட்ட சில சிசிடிவி காட்சிகள் மீட்கப்பட்டுள்ளன என்று சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் தெரிவித்துள்ளார்.

சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர், சாத்தான்குளத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, தலைறைவாக உள்ள காவலர் முத்துராஜ் இன்னும் 2 நாள்களில் கைது செய்து விடுவோம். சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில், அழிக்கப்பட்ட சில சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளன. வழக்கு தொடர்பாக ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸை விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. வழக்கில் தொடர்புடைய சிசிசிடிவி காட்சிகள் சில கிடைத்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் அரசியல் தலையீடு ஏதும் இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, வழக்கில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என்று பதில் அளித்தார்.

இதற்கிடையே, சாத்தான்குளம் தந்தை - மகன் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதால், சாத்தான்குளம் காவல்நிலையத்தை காவல்துறை வசம் ஒப்படைக்க வருவாய்த் துறையினருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, சாத்தான்குளம் விவகாரம் குறித்து காவல்நிலையத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்திய நீதித்துறை நடுவர் பாரதிதாசன், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், சம்பவத்தின் நேரடி சாட்சியமான காவல் நிலைய கண்காணிப்பு கேமராவில் சம்பந்தப்பட்ட பதிவுகளை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுப்படி, பதிவிறக்கம் செய்யும் பொருட்டு உதவியாளர் வரவழைக்கப்பட்டார். சாத்தான்குளம் காவல்நிலையத்தில் 19-ம் தேதி நடைபெற்ற சம்பவம் தொடர்பான அனைத்து சிசிடிவி காட்சிகளும் கணினியில் அழிக்கப்பட்டிருந்தன. சிசிடிவி காட்சிகள் தானாகவே தினமும் அழிந்து போகும் வகையில் செட்டிங்ஸ் மாற்றப்பட்டுள்ளது. சர்வரில் போதுமான இடவசதி இருந்தும், தினமும் பதிவுகள் தானாகவே அழியும் வகையில் மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அழிக்கப்பட்ட பதிவுகளை மீட்பதற்கான மென்பொருளை காவல்துறையினர் பயன்படுத்தி, அழிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை மீட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.