ஆம்பூர் அருகே கொள்ளை
ஆம்பூர் அருகே கொள்ளை

ஆம்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை, பணம் கொள்ளை

ஆம்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on


ஆம்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம், ரூ.28 லட்சம் மதிப்பிலான என்.எஸ்.சி பாண்டு பத்திரங்கள் ஆகியவை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் மல்லிகா. இவருடைய வீட்டில் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானதால் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்த அனைவரையும் கடந்த 10 நாட்களாக சோலூர் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். இன்று சிகிச்சை முடிந்து அனைவரும் வீடு திரும்பிச் சென்று பார்த்த போது வீட்டிலிருந்த பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 70 சவரன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம், ரூ.28 லட்சம் மதிப்பிலான என்.எஸ்.சி பாண்டு பத்திரங்கள் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்று இருப்பது தெரிய வந்தது. 

இதனைத் தொடர்ந்து மல்லிகா ஆம்பூர் கிராமிய நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரோனா தொற்று நோய் பாதித்த நிலையில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com