கரோனா நிவாரண நிதி விவரங்களை தெரிவிப்பதில் சிரமம் ஏன்? சென்னை உயர் நீதிமன்றம்

கரோனா நிவாரண நிதியாக எவ்வளவு தொகை பெறப்பட்டது என்ற விவரங்களை தெரிவிப்பதில் சிரமம் ஏன்? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கரோனா நிவாரண நிதி விவரங்களை தெரிவிப்பதில் சிரமம் ஏன்? சென்னை உயர் நீதிமன்றம்
கரோனா நிவாரண நிதி விவரங்களை தெரிவிப்பதில் சிரமம் ஏன்? சென்னை உயர் நீதிமன்றம்


சென்னை: கரோனா நிவாரண நிதியாக எவ்வளவு தொகை பெறப்பட்டது என்ற விவரங்களை தெரிவிப்பதில் சிரமம் ஏன்? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவியாக பொது மக்களிடம் இருந்து தமிழக அரசு நன்கொடை பெற்று வருகிறது.

இந்த நிலையில், கரோனா நிவாரண நிதியாக தமிழக அரசுக்கு நன்கொடையாக வந்த தொகை எவ்வளவு போன்ற விவரங்கள் இணையத்தில் குறிப்பிடப்படவில்லை என்று கூறி மனு கற்பகல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கரோனா நிவாரண நிதியாக நன்கொடையாளர்களிடம் இருந்து தமிழக அரசுக்கு நிதியாக எவ்வளவு பெறப்பட்டது என்பதை வெளிப்படையாக தெரிவிப்பதில் சிரமம் ஏன்? என்று  கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் கற்பகம் என்பவர் தாக்கல் செய்த மனு மீது நாளை பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com