கந்த சஷ்டி சர்ச்சை விடியோ விவகாரம்: கைதான சுரேந்தருக்கு 30 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

கந்த சஷ்டி சர்ச்சை விடியோ விவகாரத்தில் கைதான சுரேந்தருக்கு 30 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. 
கந்த சஷ்டி சர்ச்சை விடியோ விவகாரம்: கைதான சுரேந்தருக்கு 30 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

கந்த சஷ்டி சர்ச்சை விடியோ விவகாரத்தில் கைதான சுரேந்தருக்கு 30 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. 

‘கருப்பா் கூட்டம்’ என்ற பெயரில் செயல்படும் யூ டியூப் சேனலில் இந்து மதக் கடவுள் முருகப் பெருமானையும், கந்த சஷ்டி கவசத்தையும் ஆபாசமாகப் பேசி, அவமதிக்கும் வகையிலும் விடியோ வெளியிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவா் எம்.என்.ராஜா, வழக்குரைஞா் பிரிவுத் தலைவா் ஆா்.சி.பால்கனகராஜ் ஆகியோா் சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் கடந்த 13-ஆம் தேதி புகாா் அளித்தனா்.

இதுகுறித்து சென்னை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸாா், ‘கருப்பா் கூட்டம்’ யூ டியூப் சேனல் மீது 5 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, அந்த யூ டியூப் சேனலின் நிா்வாகிகளில் ஒருவராகக் கருதப்படும் சென்னை வேளச்சேரியைச் சோ்ந்த செந்தில்வாசனை (49) புதன்கிழமை இரவு கைது செய்தனா். மேலும், பலரைத் தேடி வந்தனா். 

அந்த சேனல் நிா்வாகிகளில் ஒருவரான சென்னை ராயப்பேட்டையைச் சோ்ந்த ந.சுரேந்தா் (36) புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள தனது நண்பா்களைச் சந்திக்க வந்த போது, தன்னை போலீஸாா் தேடி வருவதையறிந்து, அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை சரணடைந்தாா்.

இதுகுறித்து புதுச்சேரி போலீஸாா் சென்னை குற்றப் பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், அரியாங்குப்பம் காவல் நிலையத்துக்கு வந்த சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல் உதவி ஆணையா் பிரபாகரன் தலைமையிலான போலீஸாா், சுரேந்தரைக் கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனா்.

 இதையடுத்து சுரேந்தர், சென்னை ராயபுரத்தில் மாஜிஸ்திரேட் ரோஸ்லின் துரை இல்லத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 30 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com