'கறுப்பர் கூட்டம் என்ற அமைப்பின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'

கறுப்பர் கூட்டம் என்ற அமைப்பின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
'கறுப்பர் கூட்டம் என்ற அமைப்பின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'
Updated on
1 min read

கறுப்பர் கூட்டம் என்ற அமைப்பின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

‘கருப்பா் கூட்டம்’ என்ற பெயரில் செயல்படும் யூ டியூப் சேனலில் இந்து மதக் கடவுள் முருகப் பெருமானையும், கந்த சஷ்டி கவசத்தையும் ஆபாசமாகப் பேசி, அவமதிக்கும் வகையிலும் விடியோ வெளியிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவா் எம்.என்.ராஜா, வழக்குரைஞா் பிரிவுத் தலைவா் ஆா்.சி.பால்கனகராஜ் ஆகியோா் சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் கடந்த 13-ஆம் தேதி புகாா் அளித்தனா்.

இதுகுறித்து சென்னை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸாா், ‘கருப்பா் கூட்டம்’ யூ டியூப் சேனல் மீது 5 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, அந்த யூ டியூப் சேனலின் நிா்வாகிகளில் ஒருவராகக் கருதப்படும் சென்னை வேளச்சேரியைச் சோ்ந்த செந்தில்வாசனை (49) புதன்கிழமை இரவு கைது செய்தனா். மேலும், பலரைத் தேடி வந்தனா். 

அந்த சேனல் நிா்வாகிகளில் ஒருவரான சென்னை ராயப்பேட்டையைச் சோ்ந்த ந.சுரேந்தா் (36) புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள தனது நண்பா்களைச் சந்திக்க வந்த போது, தன்னை போலீஸாா் தேடி வருவதையறிந்து, அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை சரணடைந்தாா். இதுகுறித்து புதுச்சேரி போலீஸாா் சென்னை குற்றப் பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். 

அதன்பேரில், அரியாங்குப்பம் காவல் நிலையத்துக்கு வந்த சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல் உதவி ஆணையா் பிரபாகரன் தலைமையிலான போலீஸாா், சுரேந்தரைக் கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனா். இதையடுத்து சுரேந்தர், சென்னை ராயபுரத்தில் மாஜிஸ்திரேட் ரோஸ்லின் துரை இல்லத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 30 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. 

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறுகையில், கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி தவறாக அர்த்தம் கற்பிக்கப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவதூறாக விமர்சனம் செய்த கறுப்பர் கூட்டம் அமைப்பின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com