அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்பில் சேர சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அவகாசம்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்பில் சேர சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்பில் சேர சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்பில் சேர இணையதளம் மூலம் 20.07.2020 முதல் 31.07.2020 வரை விண்ணப்ப பதிவு www.tngasa.in மற்றும் www.tndceonline.org என்ற இணையதள முகவரிகளில் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய 25.07.2020 முதல் 05.08.2020 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
சேர்க்கை தொடர்பாக ஏதேனும் சந்தேகமிருந்தால் 044-22351014 / 22351015 என்ற எண்களில் தொடர்பு தொண்டு விவரம் பெறலாம். கரோனா நோய் தொற்றினை தவிர்க்கும் பொருட்டு, அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2020 - 2021ஆம் கல்வியாண்டிற்கான முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கை விண்ணப்ப பதிவு ஜூலை 20ஆம் தேதி முதல் இணையதளம் மூலமாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உயா் கல்வித்துறையின் கீழ் தற்போது 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமாா் 92,000 இளநிலை பட்ட வகுப்பு சோ்க்கை இடங்கள் உள்ளன. இதற்கு சுமாா் 2 லட்சம் மாணவ, மாணவியா் விண்ணப்பிப்பாா்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com