

சேலம் மாவட்டம், சங்ககிரி, பழைய எடப்பாடி சாலை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஓங்காளியம்மன், பேச்சியம்மன் கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
சங்ககிரி அருள்மிகு ஓங்காளியம்மன், பேச்சியம்மன் சுவாமிகளுக்கு ஆடிப்பூரத்தையொட்டி வெள்ளிக்கிழமை காலை 108 லிட்டர் பால், தயிர், திருமஞ்சனம், திருநீறு, சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
பூஜையில் பெண்கள் அணிவதற்கான வளையல்கள், மஞ்சள் கயிறு உள்ளிட்ட மங்கலப்பொருள்களும், ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி கூழ் தயார் செய்தும் சுவாமிகளுக்கு படைக்கப்பட்டன.
ஒவ்வொரு வருடமும் இக்கோயிலில் ஆடிப்பூரவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. நிகழாண்டு கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையையொட்டி பக்தர்கள் இல்லாமல் பூசாரி மட்டுமே பூஜைகளை செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.