இராமநாதபுரத்தில் அதிமுகவினர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் 5ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மறைவின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி இராமநாதபுரம் மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் செலுத்தப்பட்டது.
அப்துல்கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்
அப்துல்கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்
Published on
Updated on
1 min read

இளைஞர்களின் கனவு நாயகனாக அறியப்பட்ட முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

மாவட்டக் கழக செயலாளர்,மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.முனியசாமி தலைமையில் தங்கச்சிமடம் பேய்கரும்பில் உள்ள கலாம் தேசிய நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர். இதில் கழக சிறுபான்மை பிரிவு செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஅன்வர்ராஜா, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகர், ராமேசுவரம் நகர் கழக செயலாளர் கே.கே.அர்ச்சுனன், நகர் கழக அவைத் தலைவர் ஆர்.குணசேகரன்  மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com