

சிதம்பரத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஏழை, எளிய மக்கள் 500 பேருக்கு நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள பெருமாள் தெருவில் பாரதிய ஜனதா கட்சி பொறியாளர் அணி சார்பில் ஏழை எளிய பொதுமக்களுக்கு 500 பேருக்கு அரிசி, காய்கறிகள், உள்ளிட்ட பொருள்கள் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குப் பொறியாளர் அணி பாஜக மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். மெளன சுந்தரமூர்த்தி சுவாமிகள் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் சிதம்பரம் கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் எஸ்.கார்த்திகேயன், நகராட்சி ஆணையர் பி.வி.சுரேந்திரஷா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர். நிகழ்ச்சியில் மருத்துவர்கள் இளங்குமரன், அஸ்வின், தீபிகா உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.