தமிழகத்தில் மேலும் 1,458 பேருக்கு தொற்று; பாதிப்பு 30 ஆயிரத்தைத் தாண்டியது!

தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 1,458 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 1,458 பேருக்கு தொற்று; பாதிப்பு 30 ஆயிரத்தைத் தாண்டியது!

தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 1,458 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த்தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் உள்ளிட்ட தகவல்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, தமிழகத்தில் புதிதாக 1,458 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 30,152 ஆக உயர்ந்துள்ளது. 

இதில் தமிழகத்தில் மட்டும் உறுதி செய்யப்பட்டோர் 1,423. பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் உறுதி செய்யப்பட்டோர் 35.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,146 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இன்று மேலும் 19 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 251 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் இன்று ஒரேநாளில் 633 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 16,395 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 13,503 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

தமிழகத்தில் இன்று மட்டும் மொத்தம் 16,022 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 5,76,695 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 74 (அரசு 44 + தனியார் 30) பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.

தமிழகத்தில் தொடர்ந்து 7 ஆவது நாளாக பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு இன்றைய தினம் அதிகபட்ச பாதிப்பு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com