கீழையூர் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கீழையூர் ஊராட்சி ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  சார்பாக கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
கீழையூர் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கீழையூர் ஊராட்சி ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  சார்பாக கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  சார்பாக கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவித் தொகையாக ரூபாய் 12,500 உடனடியாக வழங்கக் கோரியும், 100 நாள் வேலையை  200 நாளாக உயர்த்தக் கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் நூறு நாள் வேலைத்திட்டத் தினக்கூலியை 400 ஆக உயர்த்தி வழங்கக் கோரியும், கரோனா காலத்தில் கடன் வசூலை நிறுத்திடக் கோரியும், ரேஷன் பொருள்களை அனைவருக்கும் முழுமையாக வழங்கக் கோரியும், கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்து தனியார் நிறுவனங்கள் வழங்கியுள்ள குழு மற்றும் தனிநபர் கடன்களை 6 மாதம் வரை வசூலிப்பதை நிறுத்தக் கோரியும்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரும், ஒன்றிய உறுப்பினருமான டி.செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர்களான நாகராஜன், கண்ணையன், சுப்பிரமணியன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் செல்லையன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சீனிவாசன், ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் ராமலிங்கம் மற்றும் கட்சி உறுப்பினர்கள் எனப் பலர் பங்கேற்றனர்.மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். பிரமிடு வடிவில் சமூக இடைவெளியைப் பின்பற்றி மத்திய மாநில அரசைக் கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com