
தேனி மாவட்டம், போடியில் நறுமணப் பொருள் வாரியம் சார்பில் நடைபெற்ற மின்னணு ஏல வர்த்தகத்தில் வெள்ளிக்கிழமை, மொத்தம் 57 ஆயிரத்து 696 கிலோ ஏலக்காய் விற்பனையானது.
போடியில் ஹெச்.எஸ்.ஐ.எல்., ஏல நிறுவனம் மூலம் நடைபெற்ற ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகத்திற்கு மொத்தம் 57 ஆயிரத்து 893 கிலோ ஏலக்காய் விற்பனைக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வர்த்தகத்தில் 44 வியாபாரிகள் பங்கேற்றனர். இதில், மொத்தம் 57 ஆயிரத்து 696 கிலோ ஏலக்காய் விற்பனையானது. உயர் தரம் கிலோ ரூ.2,384-க்கும், சராசரி தரம் கிலோ ரூ.1,533-க்கும் விற்பனையானது.
போடியில் கடந்த ஜூன் 10-ம் தேதி நடைபெற்ற ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகத்தில், உயர் தரம் கிலோ ரூ.2,377-க்கும், சராசரி தரம் கிலோ ரூ.1,658.31-க்கும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்திலுள்ள புத்தடியில் நாளை(சனிக்கிழமை) மாஸ் எண்டர்பிரைசஸ் ஏல நிறுவனம் மூலம் ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகம் நடைபெறும் என்று நறுமணப் பொருள் வாரியம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.