
சென்னை: சென்னையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 277 பேர் மாயமானதாக மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி தமிழகத்தில் புதிதாக 1,974 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 1,941 பேருக்கும், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 33 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 44,661 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று புதிதாக 1,415 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 38 பேர் பலியாகியுள்ளனர். இதில் அரசு மருத்துவமனையில் 22 பேரும், தனியார் மருத்துவமனையில் 16 பேரும் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 435 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 277 கரோனா மாயமானதாக மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலில், ‘சென்னையில் மே 23 முதல் ஜூன் 11 வரை கரோனா தொற்று உறுதியான 277 பேர் மாயமாகி விட்டனர். தவறான முகவரி மற்றும் செல்போன் எண்களை விட்டு மாயமாகி விட்ட அந்த 277 பேரை கண்டறியும் முயற்சியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.