ஊரடங்கு மட்டுமே தீர்வு என்ற மாயையிலிருந்து வெளிவர வேண்டும்: அரசைச் சாடிய ஸ்டாலின்

ஊரடங்கு மட்டுமே தீர்வு என்ற மாயையிலிருந்து வெளிவர வேண்டும்: என்று தமிழக அரசை திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

சென்னை: ஊரடங்கு மட்டுமே தீர்வு என்ற மாயையிலிருந்து வெளிவர வேண்டும்: என்று தமிழக அரசை திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக திங்களன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

மீண்டும் முழு ஊரடங்கு என்பது வதந்தி என்று இரண்டு நாட்களுக்கு முன்பு சொன்ன @CMOTamilNadu  19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு என்று இன்று அறிவிக்கிறார். ஆட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை! இந்த முழு ஊரடங்கையாவது முறையான ஊரடங்காக அமல்படுத்த வேண்டும்!

ஊரடங்கு மட்டுமே தீர்வு என்ற மாயையிலிருந்து அதிமுக அரசு முதலில் வெளிவந்து விரிவான பரிசோதனைகள், தொற்றுக்கான தொடர்புகள், உரிய சிகிச்சைகளே #Covid19-ஐ தடுக்கும் வழி என்பதை உணர வேண்டும். கொரோனா ஒழிப்பு தவிர மாற்றுச் சிந்தனை இல்லாமல், வெளிப்படைத் தன்மையுடன் அரசு செயல்பட வேண்டும்!  

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com