மாவட்ட ஆட்சியர் கந்தசாமி
மாவட்ட ஆட்சியர் கந்தசாமி

வெளிமாவட்ட நபர்களுக்கு திருவண்ணாமலையில் அனுமதியில்லை: ஆட்சியர்

வெளிமாவட்டங்களில் இருந்து வரும் நபர்களுக்கு திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் அனுமதியில்லை என்று மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார்.
Published on

திருவண்ணமலை: வெளிமாவட்டங்களில் இருந்து வரும் நபர்களுக்கு திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் அனுமதியில்லை என்று மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிதாக 1,843 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்களன்று கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மட்டும் இன்று தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டோர் 1,789 பேர். வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 54.

இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று புதிதாக 1,257 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுவரை இல்லாத அளவுக்கு இன்றைய அறிவிப்பில் 44 பேர் பலியாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் கரோனா பலி எண்ணிக்கை 479 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் நபர்களுக்கு திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் அனுமதியில்லை என்று மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘வெளிமாவட்டங்களில் இருந்து வரும் நபர்களுக்கு திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் அனுமதியில்லை; அனுமதியின்றி உள்ளே அரும் நபர்களுக்கு உதவி செய்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் மாவட்டத்திற்குள் யாரும் முகக்கவசம் அணியாமல் சென்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com