காங்கயம் இன மாடுகளை விற்க இலவச தொடர்பு எண் அறிவிப்பு

கொங்கு கோசாலை சார்பில் பல்வேறு தரப்பினர் ஒருங்கிணைந்த காங்கயம் இன மாடுகளை விற்பனை செய்ய இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கயம் இன மாடுகள்
காங்கயம் இன மாடுகள்
Published on
Updated on
1 min read

கொங்கு கோசாலை சார்பில் பல்வேறு தரப்பினர் ஒருங்கிணைந்த காங்கயம் இன மாடுகளை விற்பனை செய்ய இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொங்கு மண்டலமான திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில், காங்கயம், தாராபுரம், மூலனூர் பகுதிகள் மற்றும் கோவை, கரூா், ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் காங்கயம் இன நாட்டு மாடுகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. 

கிடைத்ததைச் சாப்பிடுவது, குறைவான தீவனத் தேவை, வேலைத் திறன், நோய் எதிர்ப்புச் சக்தி, சுவை மிகுந்த சத்தான பால், கம்பீர தோற்றம் போன்றவற்றுக்காக காங்கயம் இன மாடுகள் விரும்பப்படுகிறது. 

காங்கயம் இன மாடுகள் மட்டும் வியாபாரம் நடைபெறும் தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் கண்ணபுரம், வருடாந்திர மாட்டுத் தாவணி, பழைய கோட்டை வாராந்திர மாட்டுச் சந்தை ஆகியவை கரோனா ஊரடங்கால் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பிற மாட்டுச் சந்தைகளும் கடந்த மூன்று மாதங்களாக நடைபெறவில்லை. இதனால் காங்கயம் இன மாடுகளை விற்க முடியாமல் சிரமம் ஏற்பட்டது. உதவும் கரங்களாக காங்கயம் காடையூர் கொங்கு கோசாலை சார்பில் பல்வேறு தரப்பினர் ஒருங்கிணைந்த காங்கயம் இன மாடுகள் விற்பனை சேவை மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

18001215662 என்கிற இலவச தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு இடைத்தரகர்கள் இல்லாமல் காங்கயம் இன மாடுகளை விற்க, வாங்க முடியும். இச்சேவை மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகப் பலரும் பாராட்டுத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com