கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று 2,174 பேருக்கு தொற்று உறுதி; மேலும் 48 பேர் பலி

தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 2,174 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :17 ஜூன் 2020, 1:51 pm

DIN

தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 2,174 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் குறித்த சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இன்று புதிதாக 2,174 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் மட்டும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டோர் 2,094 பேர். வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 80.

இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று புதிதாக 1,276 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 35,521 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், இன்று 48 பேர் பலியாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 576 ஆக உயர்ந்துள்ளது. 

அதேசமயம், இன்று மொத்தம் 842 பேர் கரோனா தொற்றிலிருந்து  குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 27,624 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்றைய தேதியில் மொத்தம் 21,990 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்பு

தமிழகத்தில் கரோனா பரிசோதனைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. நேற்று 19,242 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், இன்று மட்டும் 25,463 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 7,73,707 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.