
சென்னை: ஊரடங்கிற்குள் ஊரடங்கு என காலம் நீள்கிறது என்று மநீம தலைவர் கமல் வேதனை தெரிவித்துள்ளார்.
பரவி வரும் கரோனா தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த வெள்ளிக்கிழமை முதல் இம்மாத இறுதி வரும் முழுமையான ஊரடங்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கிற்குள் ஊரடங்கு என காலம் நீள்கிறது என்று மநீம தலைவர் கமல் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘வெளிப்படைத்தன்மையின்றி செயல்பட்டதால் ஊரடங்கிற்குள் ஊரடங்கு என காலம் நீள்கிறது. முழு பொதுமுடக்க காலத்தில் என்ன தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறோம் என மக்களுக்கு விளக்க வேண்டியது அரசின் கடமை ஆகும்’ என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.