கரோனா  இல்லாமல் இருந்த காரைக்காலில் தொற்றாளர் எண்ணிக்கை 6-ஆக உயர்வு

கரோனா தொற்றே இல்லாமல் நீடித்துவந்த காரைக்காலில் வெள்ளிக்கிழமை வந்த பரிசோதனை அறிக்கையின்படி தொற்றாளர் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.
கரோனா  இல்லாமல் இருந்த காரைக்காலில் தொற்றாளர் எண்ணிக்கை 6-ஆக உயர்வு

கரோனா தொற்றே இல்லாமல் நீடித்துவந்த காரைக்காலில் வெள்ளிக்கிழமை வந்த பரிசோதனை அறிக்கையின்படி தொற்றாளர் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் அனைவரும் சென்னையிலிருந்து வந்தவர்கள் என நலவழித்துறை நிர்வாகம் தெரிவித்தது. 

பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது முதல் பல வாரங்களாக காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தொற்று இல்லாமல் பச்சை மண்டலமாக இருந்தது. ஏப்ரல் மாத மத்தியில் திருநள்ளாற்றில் கார் ஓட்டுநருக்கு ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் துபையிலிருந்து வந்த பெண்ணுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினர்.

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயராமல்  இருந்த வந்த நிலையில், சென்னையிலிருந்து காரைக்காலுக்கு வரும் மக்களை பரிசோதனை செய்துவரும்போது, தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை 5 பேர் காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு  சிகிச்சை பெறுகின்றனர்.

நலவழித்துறை துணை இயக்குநர் கே.மோகன்ராஜ் வெள்ளிக்கிழமை கூறுகையில்,  திருமலைராயன்பட்டினம் பகுதி காமாட்சியம்மன் கோயில் பகுதியை சேர்ந்த 6 பேர் அண்மையில் சென்னையிலிருந்து வந்தனர். இவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 14 வயது சிறுமிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்த குடும்பத்தினருக்கு மறுமுறை பரிசோதனை செய்யப்பட்டதில், அந்த சிறுமியின் 35 வயதுடைய உறவுப் பெண் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. பிறருக்கு தொற்று இல்லை என அறிக்கை வந்தது. பாதிக்கப்பட்டவர்  காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் என்றார்.

இதன்படி காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தீநுண்மி தொற்றாளர் எண்ணிக்கை தற்போது 6}ஆக உள்ளது.   காரைக்காலில் இருந்து மக்கள் வாகனப் போக்குவரத்துள்ள புதுச்சேரி, கடலூர், நாகை, திருவாரூர் மாவட்டங்கள் கரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில், காரைக்கால் தொற்றாளர் இல்லாமல் இருந்துவந்தது தற்போது மாறியிருக்கிறது.

காரைக்காலில் கடந்த புதன்கிழமை மாலை முதல் தமிழகத்தையொட்டியுள்ள எல்லைகளில் கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. போலீஸôர், வருவாய்த்துறையினர் தீவிரமாக கண்காணித்து, அவசியமான வாகனங்களை மட்டும் அனுமதிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com