பெருமாநல்லூர் விவசாயத் தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி

பெருமாநல்லூர் விவசாயத் தியாகிகள் நினைவிடத்தில், பல்வேறு விவசாய அமைப்பினர் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
பெருமாநல்லூர் விவசாயத் தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி

பெருமாநல்லூர் விவசாயத் தியாகிகள் நினைவிடத்தில், பல்வேறு விவசாய அமைப்பினர் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.

1970 ஜூன் 19ஆம் தேதி ஒரு பைசா மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், இலவச மின்சாரத்திற்காகவும் பெருமாநல்லூரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், போராட்டத்தில் ஈடுபட்ட மாரப்பகவுன்டர், ராமசாமிக்கவுண்டர், ஆயிக்கவுண்டர் ஆகிய விவசாயிகள் உயிரிழந்தனர். 

இதையடுத்து இவர்களது நினைவிடம் பெருமாநல்லூர்-ஈரோடு சாலையில் அமைக்கப்பட்டது. இந்த நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இதில் பல்வேறு விவசாய அமைப்பினர், பல்வேறு கட்சியினர், சமூக அமைப்பினர் உள்ளிட்டோர் பங்கேற்று நினைவஞ்சலி செலுத்தி தியாகிகள் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com