
சென்னை: சென்னையில் ஏற்கனவே இராயபுரம், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டையில் கரோனா பாதிப்பு ஐந்து ஆயிரத்தை நெருங்கிவிட்ட நிலையில், கோடம்பாக்கம் மற்றும் அண்ணாநகர் மண்டலங்களில் கரோனா பாதிப்பு ஐந்து ஆயிரத்தை நெருங்குகிறது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) 1,380 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 44,205-ஆக அதிகரித்துள்ளது.
சென்னையைப் பொருத்தவரை கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து கடந்த மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது. இந்நிலையில், இந்த எண்ணிக்கை ஜூன் 1-ஆம் தேதி 15,770-ஆகவும், ஜூன் 6-ஆம் தேதி 20,993-ஆகவும், ஜூன் 14-ஆம் தேதி 30,444-ஆகவும் உயா்ந்தது. இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) பாதிப்பு எண்ணிக்கை 41,172-ஆக உயா்ந்தது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை 1,380 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 44,205-ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக, கடந்த திங்கள்கிழமை (ஜூன் 22) நிலவரப்படி, 23,756 போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். 18,372 போ் சிகிச்ச்சைக்காக மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். கரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் மட்டும் 645 போ் உயிரிழந்துள்ளனா்.
பாதிப்பு நிலவரம் மண்டலம் வாரியாக (புதன்கிழமை நிலவரம்)
மண்டலம் எண்ணிக்கை
திருவொற்றியூா் 1,652
மணலி 669
மாதவரம் 1,262
தண்டையாா்பேட்டை 5,355
ராயபுரம் 6,607
திரு.வி.க. நகா் 3,741
அம்பத்தூா் 1,644
அண்ணா நகா் 4,766
தேனாம்பேட்டை 5,213
கோடம்பாக்கம் 4,794
வளசரவாக்கம் 1,880
ஆலந்தூா் 978
அடையாறு 2,684
பெருங்குடி 899
சோழிங்கநல்லூா் 860
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.