வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தூத்துக்குடி எஸ்.பி. அருண் பாலகோபாலன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அருண் பால கோபாலன் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

News image
எஸ். ஜெயக்குமார்
Updated On :30 ஜூன் 2020, 8:52 am

DIN

சென்னை: தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அருண் பால கோபாலன் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

காவல்துறை உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்திருந்தது.

அந்த உத்தரவில், தென்மண்டல ஐ.ஜி.யாக இருக்கும் சண்முக ராஜேஸ்வரன் இன்றுடன் ஓய்வு பெறுவதால் தென் மண்டல புதிய ஐஜியாக எஸ். முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை பொருளாதார குற்றப் பிரிவு ஐ.ஜி.யாக இருந்தார்.

அதே சமயம், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த அருண் பாலகோபாலன் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக விழுப்புரம் காவல் கண்காணிப்பாளராக இருந்த ஜெயக்குமார் தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.