குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக கன்னியாகுமரி, தென்காசியில் பாஜக சார்பில் இன்று பேரணி நடைபெறுகிறது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தில்லியில் குடியுரிமைச் சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதல் வன்முறையாக வெடித்ததில் 42 பேர் உயிரிழந்தனர்.
இதற்கிடையே, குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதா, தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு ஆதரவாக தமிழக பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வெள்ளிக்கிழமை பாஜக சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேரணி நடைபெற்றது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பேரணியின் இறுதியில் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, கன்னியாகுமரி, தென்காசியில் இன்று பாஜக சார்பில் பேரணி நடைபெற உள்ளது. கன்னியாகுமரியில் நடைபெறும் பேரணியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொள்கிறார்.
தென்காசியில் நடைபெறும் பேரணியில் பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.