கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் ஆணை: அமைச்சர் வேலுமணி

கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் பழனிசாமி ஆணையிட்டு உள்ளதாக, அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
அமைச்சர் வேலுமணி
அமைச்சர் வேலுமணி
Updated on
1 min read

கோவை: கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் பழனிசாமி ஆணையிட்டு உள்ளதாக, அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி 'முத்திரை பதித்த மூன்றாண்டு முதலிட மே அதற்கு சான்று' என்னும் தலைப்பில் நடைபெற்றது. இதில் உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி கலந்து கொண்டு புகைப்படக் கண்காட்சியை தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன், பிஆர் ஜி அருண்குமார் மற்றும் மாநிலங்கள் அவை உறுப்பினர் செல்வராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் இராசாமனி, காவல் துறை ஆணையர் சுமித். சரண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி கடந்த 17ஆம் தேதி அன்று அரசின் 3 ஆண்டுகள் சாதனைகளை புத்தகமாகவும், குறும்படம் ஆகவும் முதல்வர் வெளியிட்டார்கள். இன்றைக்கு அதனைத் தொடர்ந்து முத்திரை பதித்த மூன்று ஆண்டு முதல் இடமே அதற்கு சான்று என்னும் தலைப்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சியில் 3 ஆண்டுகளில் முதலமைச்சர் செயல்படுத்தப்பட்ட சிறப்பான திட்டங்கள் அரசு நலத்திட்டங்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவித்த திட்டங்கள் மக்களுக்கு தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கு சாட்சியாக குறிப்பாக கோவை மாவட்டத்தில் காந்திபுரம் பகுதியில் அமைந்திருக்கக் கூடிய இந்நிகழ்ச்சி நானும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது கோவை மாவட்டத்தில் அம்மா அவர்களும் தமிழக முதல்வர் எடப்பாடி அவர்களும் 50 ஆண்டு காலத்தில் இல்லாத உணர்ச்சியை இந்த ஐந்து ஆண்டு காலத்தில் கொடுத்திருக்கிறார்கள் அத்தனை சாதனை விளக்கப் படங்களும் இங்கே இருக்கின்றது கோவை மாவட்டத்தில் இருக்கக்கூடிய அனைத்து மக்களுக்கும் இன்றைக்கு தமிழகத்திலேயே முக்கியமான மாவட்டமாக கோவைக்கு இவ்வளவு பெரிய வளர்ச்சியை கொடுத்து உள்ளார்கள் இதை பூர்த்தி செய்யும் வகையில் பாலங்கள் சாலைகள் ஸ்மார்ட்சிட்டி திட்டம் அரசு மருத்துவமனை மேம்பாடு அனைத்து திட்டங்களையும் வேகமாக முடிக்க வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது முதலமைச்சர் அவர்களும் வழிகாட்டி அதை சிறப்பான முறையில் வேகமாக முடிக்க வலியுறுத்தி இருக்கிறார்கள் ஆணையிட்டு உள்ளார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com