மண் கடத்தலை தடுக்க முயன்ற நில வருவாய் ஆய்வாளரை தாக்கி கார் ஏற்றிக் கொல்ல முயற்சி

திருப்பூரில் கிராவல் மண் கடத்தலை தடுக்க முயன்ற நில வருவாய் ஆய்வாளரை தாக்கி  கார் ஏற்றி கொல்ல முயற்சி நடந்துள்ள சம்பவம் ஆட்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவசக்தி
சிவசக்தி

திருப்பூர்: திருப்பூரில் கிராவல் மண் கடத்தலை தடுக்க முயன்ற நில வருவாய் ஆய்வாளரை தாக்கி  கார் ஏற்றி கொல்ல முயற்சி நடந்துள்ள சம்பவம் ஆட்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் நல்லூரில் நில வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சிவசக்தி.  இவருக்கு புதுப்பாளையம் பகுதியில் கிராவல் மண் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து விரைந்து சென்று இரண்டு மண் ஏற்றிய லாரிகளை பிடித்துள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த மண் கடத்தல் லாரிகளின் உரிமையாளர் கொடுவாய் பகுதியை சேர்ந்த  அப்புக்குட்டி மற்றும் அவரது மகன் இருவரும் சேர்ந்து தன்னைத்  தாக்கியதாகவும் காரில் ஏற்றி கொல்ல முயன்று  காலில் ஏற்றியதாகவும் பணியில் பாதுகாப்பு இல்லை என நில வருவாய் ஆய்வாளர் சிவசக்தி கண்ணீருடன் தெரிவித்தார்.

மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் வருவாய் ஆய்வாளரை தாக்கியது மற்றும் காலில் காரி ஏற்றியது போன்ற காட்சிகளை காவல் நிலையத்தில் சமர்ப்பித்து புகார் அளித்துள்ளார் இது குறித்து நல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மண் கடத்தலை தடுக்க முயன்ற நில வருவாய் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தி காலில் காரி ஏற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com