தேசிய நதிகள் இணைப்பு ஆணையத்தை விரைந்து அமைக்க வேண்டும்: ராமதாஸ்

தேசிய நதிகள் இணைப்பு ஆணையத்தை விரைந்து அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 
பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்
Published on
Updated on
1 min read

தேசிய நதிகள் இணைப்பு ஆணையத்தை விரைந்து அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், இந்தியாவில் நதிகள் இணைப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக தேசிய நதிகள் இணைப்பு ஆணையம் (National Interlinking of Rivers Authority - NIRA)) என்ற புதிய அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நதிகள் இணைப்புக்கு புதிய உத்வேகம் அளிக்கும் வகையிலான மத்திய அரசின் இந்த முடிவு முற்போக்கான ஒன்றாகும்.

இந்தியாவில் இப்போது 6 நதிகள் இணைப்புத் திட்டம் செயல்பாட்டுக்கு தயாராக உள்ளது. அவற்றில் முக்கியமானது கோதாவரி & காவிரி இணைப்பு ஆகும். தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை கர்நாடகம் முறையாக திறந்து விடாத நிலையில், வருங்காலங்களில் காவிரி பாசன மாவட்டங்களில் தடையின்றி விவசாயம் நடைபெற வேண்டுமென்றால் கோதாவரி & காவிரி நதிகள் இணைப்பு எவ்வளவு விரைவாக நடத்தப்பட வேண்டுமோ, அவ்வளவு விரைவாக நடக்க வேண்டும்.

கோதாவரி & காவிரி இணைப்புத் திட்டத்திற்காக மகாநதியிலிருந்து உபரி நீரை எடுக்க திட்டமிடப் பட்டிருந்தது. ஆனால், அதற்கு ஒதிஷா அரசு ஒப்புக்கொள்ளாத நிலையில், கோதாவரி & காவிரி ஆறுகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த மட்டும் மத்திய நீர்வள அமைச்சகம் தீர்மானித்துள்ளது.  அதற்கான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவாக பணிகள் தொடங்கப்பட வேண்டும். ஆனால், ஆணையம் அமைக்கத் தாமதமாவதால் நதிகள் இணைப்பும் தாமதமாகக் கூடும்.

எனவே, தேசிய நதிகள் இணைப்பு ஆணையத்தை விரைந்து அமைக்க வேண்டும். ஒருவேளை ஆணையம் அமைக்க தாமதம் ஆகும் என்றால், கோதாவரி & காவிரி நதிகள் இணைப்புத் திட்டத்தை  மத்திய நீர்வள அமைச்சகமே நேரடியாக குறைந்த காலத்தில் செயல்படுத்தி முடிக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com