தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் இல்லை : திமுக வெளிநடப்பு

தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படாது என்று அரசு கூறியதைக் கண்டித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் இல்லை : திமுக வெளிநடப்பு
Updated on
1 min read

சென்னை: தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படாது என்று அரசு கூறியதைக் கண்டித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.

மேலும், தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பாக எழுந்த சந்தேகங்கள் குறித்து தமிழக அரசு எழுதிய கடிதத்துக்கு மத்திய அரசின் பதில் வந்துவிட்டதா? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

அதற்கு தமிழக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அளித்த பதிலில், தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் (என்பிஆர்) உள்ள சந்தேகங்கள் குறித்து தமிழக அரசு எழுப்பிய கடிதத்துக்கு மத்திய அரசு இன்னும் பதில்அளிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

மேலும், நாடாளுமன்றத்தில் நிறைவேறிய சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய சட்டத்தை பேரவைத் தீர்மானம் கட்டுப்படுத்தாது என்று கூறிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், சட்டப்பேரவையில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று கூறினார்.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக தீர்மானம் இயற்றப்படாது என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com