திருவள்ளூரில் வெறிச்சோடிய சாலைகள்

திருவள்ளூரில் வெறிச்சோடிய சாலைகள்

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையிலும், ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கத்தில் பிரதமரின் வேண்டுகோளை ஏற்று

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையிலும், ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கத்தில் பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவை கடைபிடத்து பொதுமக்கள் ஒத்துழைப்பு அழைத்து வருவதால் திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டதால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. சீனாவில் பரவிய கரோனை வைரஸ் தொற்று மேற்கத்திய நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் பரவி வருகிறது. 

எனவே இதை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 19}ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் 22}ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை ) மக்கள் நலனை கருத்திற்கொண்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது போல சுய ஊரடங்கு காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கடைபிடிக்க வேண்டும். அப்போது, பொதுமக்கள் ஒவ்வொருவரும் அத்திவாசிய தேவைகளுக்காக மட்டுமின்றி எக்காரணம் கொண்டும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.

அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தங்களை ஒவ்வொரு பாதுகாத்து கொள்ளும் நோக்கத்தில் சுய ஊரடங்கை பொதுமக்கள் கடைபிடித்து வருகின்றனர். இந்த அழைப்பிற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், வணிகர்கள் பல்வேறு சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் காய்கறி கடைகள் மருந்து கடைகள், பெரிய சந்தைகள் போன்றவை அடைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து காலை முதலே கடைபிடிக்க தொடங்கியதால் சாலையில் பொதுமக்கள் நடமாட்டமில்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. 

மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி ஆகிய பணிமனைகள் மூலம் இயக்கப்படும் 207 அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள்}80 பேருந்துகளும் என முழுவதுமாக இயக்கப்படவில்லை. இதனால் திருவள்ளூரில் இருந்து ஆவடி, திருத்தணி, செங்குன்றம் மற்றும் ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அதேபோல், ஞாயிற்றுக்கிழமை 6 மணி முதல் 11 மணி வரையில் 6 விரைவு ரயில்கள் மட்டும் சென்றுள்ளது. 

மேலும், சென்னையில் இருந்து திருவள்ளூர் வழியாக இயக்கப்பட்டு வந்த கோவை, பெங்களூரு, திருவனந்தபுரம், மும்பை, புதுதில்லி என 25 விரைவு ரயில்கள், 45 புகர் ரயில்கள் என 200 தடவைக்கு மேல் சென்று வரும் ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. இதனால், ஆவடி, திருநின்றவூர், நெமிலிச்சேரி, வேப்பம்பட்டு, புட்லூர், திருவள்ளூர், ஏகாட்டூர், கடம்பத்தூர், திருவாலங்காடு, திருத்தணி ஆகிய ரயில் நிலையங்கள் அனைத்தும் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோல், ஆட்டோக்களும் இயங்கவில்லை.
அதேபோல், இந்த மாவட்டத்தில் மருந்துக் கடைகள், பெட்ரோல் நிலையங்கள் மட்டும் திறக்கப்பட்டிருந்தது. 

இதை தவிர்த்து நகரங்கள் மற்றும் கிராமங்களில் ஒரு சில கடைகள் தவிர்த்து 11020 கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. மூடப்பட்டிருந்தது. இதுபோன்ற காரணங்களால் பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கியதால், தெருக்களில் கூட்டம் இல்லாமல் இருந்தது. அதனால், மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை மக்கள் முழுமையாக கடைப்பிடித்தனர். இதனால், பேருந்து நிலையம், ரயில் நிலையம், காய்கறி சந்தைகள் என அனைத்து இடங்களும் பொதுமக்களின்றி வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com