ஆந்திரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஒத்தி வைப்பு

ஆந்திராவில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஒரு பாகமாக இம்மாதம் தொடங்கவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஆந்திர  அரசு ஒத்தி வைத்துள்ளது.
ஆந்திரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஒத்தி வைப்பு

ஆந்திராவில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஒரு பாகமாக இம்மாதம் தொடங்கவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஆந்திர  அரசு ஒத்தி வைத்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் கரோனா தொற்று பரவுவதை தடுக்க அம்மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

மாநில எல்லைகள் மூடப்பட்டு போக்குவரத்து வசதிகளும் முடக்கப்பட்டது. ஆந்திராவில் மாநிலம் தழுவிய 144 தடை உத்திரவு பிறக்கப்பட்டுள்ளது. ஆயினும் குறிப்பிட்டபடி பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுதேர்வுகள் வழக்கம் போல் நடக்கும் என ஆந்திர அரசு தெரிவித்திருந்தது.

ஆனால் மாநிலத்திற்குள் போக்குவரத்துகள் முடக்கப்பட்டதால், மாணாக்கர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வது கேள்விகுறியாகியுள்ள நிலையில் அரசு இம்மாதம் 31ம் தேதி வரை பொது தேர்வுகளை ரத்து செய்து 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது. 

செவ்வாய்க்கிழமை உத்திரவு வெளியிட்டது. மார்ச்.31ம் தேதிக்கு பின் மாநிலத்தின் நிலையை கவனித்து அதன் பின் தேர்வு தேதிகளை வெளியிட உள்ளதாக ஆந்திர அரசின் பள்ளிகல்வித்துறை உத்திரவில் குறிப்பிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com