

தமிழகத்தில் புதிதாக 266 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுபற்றி தமிழக சுகாதாரத் துறை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி:
தமிழகத்தில் புதிதாக 266 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 3,023 ஆக உயர்ந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் புதிதாக 203 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,458 ஆக உயர்ந்துள்ளது.
இன்று புதிதாக ஒருவர் பலியானதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 30 ஆக உள்ளது.
அதேசமயம் இன்று மேலும் 38 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,379 ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.