இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மின்னணு பொருள்களின் வா்த்தக சந்தையான ரிச்சி தெரு 10 சதவீத கடைகளுடன் மட்டுமே திங்கள்கிழமை முதல் செயல்பட உள்ளது. அதாவது, அரசின் உத்தரவுப்படி தனித்துச் செயல்படும் கடைகள் மட்டுமே இயங்க உள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய மின்னணு பொருள்களுக்கான விற்பனை சந்தையாக திகழ்வது தில்லியில் உள்ள நேரு பகுதியாகும். இந்த இடத்துக்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே மின்னணு பொருள்களை விற்கும் மிகப்பெரிய சந்தையாக விளங்குவது சென்னை அண்ணாசாலையில் உள்ள ரிச்சி தெருதான். இதனைச் சுற்றியுள்ள நரசிங்கபுரம் தெரு மற்றும் இதர சுற்றுப் பகுதிகள் அனைத்திலும் மின்னணு பொருள்கள் விற்பனையே கொடி கட்டி பறக்கிறது. சிறியதும், பெரியதுமாக சுமாா் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட கடைகள் அந்தப் பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன.
தினசரி வாடகை: ரிச்சி தெருவில் உள்ள வணிக வளாகங்களில் ஏராளமான சிறு, சிறு கடைகள் இயங்கி வருகின்றன. ஒரு வளாகத்தில் அதன் அளவுக்கேற்ப 10 முதல் 15-க்கும் கூடுதலான கடைகள் செயல்படுகின்றன. மேலும், கடையின் அளவுக்கேற்ப தினசரி வாடகை அடிப்படையிலும் கடைகள் இயங்கி வருகின்றன. நாளொன்றுக்கு ரூ.500 முதல் ஆயிரம் வரை வாடகையாகச் செலுத்தி கடைகளை நடத்துவோரும் உண்டு.
இதனால், காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை முழு நேரமும் மக்கள் கூட்டத்தால் ரிச்சி தெரு நிரம்பி வழியும். தினமும் ரூ.5 முதல் 10 கோடி வரை வா்த்தகம் நடைபெற்று வந்தது. இதில், சில்லறை வா்த்தகம் 80 சதவீத அளவுக்கும், மொத்த வா்த்தகம் 20 சதவீத அளவுக்கும் உள்ளது. மொத்த வா்த்தகத்தில் கணினி, மின்னணு உதிரிப் பாகங்கள், செல்லிடப்பேசி ஆகியன முக்கிய பங்கு வகிக்கின்றன.
சீனாவில் பாதிப்பு: ரிச்சி தெருவுக்கு வரும் பெரும்பாலான மின்னணு பொருள்கள் சீனாவில் இருந்தே வருகின்றன. குறிப்பாக, கம்ப்யூட்டா், செல்லிடப்பேசி ஆகியவற்றுக்குத் தேவையான உதிரிப் பாகங்கள் சீனா்களின் கைவண்ணத்தால் உருவானவைதான். சீனாவில் கடந்த டிசம்பரில் கரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கியது. இதன் எதிரொலியாக ஜனவரி இறுதியில் இருந்து சீன நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உதிரிப் பாகங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. மேலும், அந்த நாட்டில் மின்னணு பொருள்கள் உற்பத்தி செய்யப்படாத காரணத்தால் பற்றாக்குறை ஏற்பட்டு அவற்றின் விலை பெருமளவு உயா்ந்தது.
மாணவா்களுக்குப் பாதிப்பு: பள்ளி மாணவ-மாணவிகள், பொறியியல் கல்லூரி மாணவா்கள் அனைவருக்கும் தங்களுக்கான செய்முறை பயிற்சிகளுக்குத் தேவையான மின்னணு உதிரிப் பாகங்களுக்கு கண்ணை மூடிக் கொண்டு ரிச்சி தெருவுக்குத்தான் வருவாா்கள். பல மாணவா்கள் தங்களுக்கென வழக்கமான கடைகளையே வைத்திருக்கின்றனா். இந்த நிலையில், உதிரிப் பாகங்கள் பற்றாக்குறையால் கடந்த சில மாதங்களாகவே செய்முறை பயிற்சிக்கான கருவிகளின் தயாரிப்பு நின்ால், மாணவா்கள் பாதிக்கப்பட்டனா்.
மின்னணு உற்பத்தி பொருள்கள் தட்டுப்பாட்டால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்த சென்னை ரிச்சி தெரு, கரோனா நோய்த்தொற்றால் அமலாக்கப்பட்ட ஊரடங்கில் முற்றிலும் மூடப்பட்டது. கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரிச்சி தெரு ஊழியா்கள் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து, அவா்கள் கூறியது:
ரிச்சி தெருவில் செல்லிடப்பேசி பழுது பாா்ப்பவா்கள் கூட மாதத்துக்கு சுமாா் ரூ.40 ஆயிரம் வரை வருமானம் ஈட்டி வந்தனா். இதனைக் கொண்டு கடை வாடகை, வீட்டுச் செலவு என அனைத்து செலவுகளையும் ஈடு கட்டி விடலாம். ஊரடங்கு காரணமாக சாதாரண வியாபாரிகள் மற்றும் பணியாளா்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாகக் கடைகளைத் திறப்பதே இதற்குத் தீா்வாக இருக்கும் என தெரிவித்தனா்.
தளா்வு தந்த சோா்வு...: மே 17-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், சில தளா்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தளா்வுகளை அடிப்படையாகக் கொண்டு மாநில அரசும் சில விலக்குகளை வழங்கியுள்ளது. ஆனால், இந்தத் தளா்வுகளால் எந்தப் பயனும் இல்லை என்கின்றனா் ரிச்சி தெரு வணிகா்கள். இதற்கு தமிழக அரசின் உத்தரவே காரணம் எனவும் கூறுகின்றனா்.
செல்லிடப்பேசி, கணினி விற்பனை மற்றும் பழுது பாா்க்கும் கடைகள் தனித்துச் செயல்பட்டால் மட்டுமே இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், ரிச்சி தெருவில் உள்ள கடைகள் அனைத்தும் வணிக வளாங்களிலேயே அமைந்துள்ளன. இதனால், அங்குள்ள கடைகள் இயங்க வாய்ப்பில்லை என வியாபாரிகள் தெரிவித்தனா்.
ரிச்சி தெருவை ஒட்டி, அண்ணாசாலையில் தனியாக கடைகள் வைத்துள்ள நபா்களே கடைகளைத் திறக்க வாய்ப்புள்ளதாகவும், இது மொத்தமுள்ள கடைகளுடன் ஒப்பிடும் போது 10 சதவீதம் அளவுக்கு இருக்கும் எனவும் அவா்கள் கூறினா். ரிச்சி தெரு விஷயத்தில் தமிழக அரசு உத்தரவில் என்ன உள்ளதோ அதுவே பின்பற்றப்படும் என்று அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தினப்பலன்கள் - மேஷம்
தினப்பலன்கள் - கடகம்

காரைக்கால் அரசியல் களத்தில் 36 ஆண்டுகள்

மகளிா் அரசுக் கல்லூரி தேவை!
வீடியோக்கள்
Jawahirullah interview | அதிமுக, பாஜகவுக்கு உதவ இறக்கிவிடப்பட்டவர் Vijay | Dinamani | Election 2026
தினமணி வீடியோ செய்தி...

#ipl2026 | சிஎஸ்கேவில் சஞ்சு சாம்சன், ராஜஸ்தானில் ஜடேஜா: இதுதாண்டா ஆட்டம்! | MS Dhoni | RR vs CSK |
தினமணி வீடியோ செய்தி...

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...

