திருவிக நகர் 324; ராயபுரம் 275: சென்னையில் 1,458 பேருக்கு கரோனா

திருவிக நகரில் 324, ராயபுரத்தில் 275 பேருக்கு கரோனா தொற்றுடன், சென்னையில் மட்டும் ஒட்டுமொத்தமாக 1,458 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. 
திருவிக நகர் 324; ராயபுரம் 275: சென்னையில் 1,458 பேருக்கு கரோனா
Updated on
1 min read

திருவிக நகரில் 324, ராயபுரத்தில் 275 பேருக்கு கரோனா தொற்றுடன், சென்னையில் மட்டும் ஒட்டுமொத்தமாக 1,458 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. 

இதற்கு அடுத்த இடத்தில் கோடம்பாக்கத்தில் 199 பேருக்கும், தேனாம்பேட்டையில் 166 பேருக்கும், அண்ணாநகரில் 130 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 118 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்த பாதிப்பு விகிதத்தில் சென்னையில் இருக்கும் கரோனா பாதிப்பு கிட்டத்தட்ட 50 சதவீதமாகும். அதிலும், ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் மட்டும் சென்னையில் 203 போ் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா்.

தமிழகத்தின் தலைநகரில் நாளுக்கு நாள் கரோனாவின் தாக்கம் அதி தீவிரமாகி வருவது மக்களிடையே அதிா்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான பணிகளை மேலும் அதிகரிக்கவும், புதிதாக பணிக் குழுக்களை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com