

தமிழகத்தில் புதிதாக 508 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவலை தமிழக சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, தமிழகத்தில் புதிதாக 508 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 4,058 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2,537 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 279 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னையில் மட்டும் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 2,008 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று இருவர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம், இன்று ஒரேநாளில் 76 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,485 ஆக உயர்ந்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக கடலூரில் புதிதாக 68 பேருக்கும், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டில் தலா 38 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படாமல் இருந்து வந்த நிலையில், இன்றைக்கு புதிதாக இருவருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.