ஆண்டிபட்டி அருகே மதுபானக் கடையில் அதிகமான கூட்டம் வந்ததால் தள்ளுமுள்ளு: காவல்துறையினர் தடியடி

ஆண்டிபட்டி அருகே ஜி.உசிலம்பட்டி கிராமத்திலுள்ள மதுபானக் கடையில் அளவுக்கு அதிகமான கூட்டம் வந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஆண்டிபட்டி அருகே மதுபானக் கடையில் அதிகமான கூட்டம் வந்ததால் தள்ளுமுள்ளு: காவல்துறையினர் தடியடி

ஆண்டிபட்டி அருகே ஜி.உசிலம்பட்டி கிராமத்திலுள்ள மதுபானக் கடையில் அளவுக்கு அதிகமான கூட்டம் வந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் லேசான தடியடி கூட்டத்தை கலைத்தனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் பிச்சம்பட்டி ,கன்னியப்பபிள்ளைபட்டி, கதிர் நரசிங்கபுரம், கண்டமனூர், ஜி. உசிலம்பட்டி உள்பட 14 டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. இதில் ஜி உசிலம்பட்டி மதுபான கடை முன்பு காலை முதலே குடிமகன்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மது பாட்டில்கள் வாங்கியவர்கள் ஆதார் அட்டையை காண்பித்து வாங்கி சென்றனர். 

காலை முதல் தொடர்ந்து அதிகரித்து வந்த கூட்டம் மதிய வேளையில் கூட்டம் அதிக அளவில் கூடியது. அப்போது வெயிலின் கொடுமை தாங்காமல் மது பிரியர்கள் முண்டியடித்து, முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளி இன்றி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அதிரடி படை வீரர்களுடன் அங்கு வந்த ஆண்டிபட்டி காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் கூட்டத்தை கட்டுப்படுத்த லேசான தடியடி நடத்தினார். 

இதனையடுத்து கூட்டத்தினர் கலைந்து ஓடினர். தொடர்ந்து கூட்டம் ஒழுங்கு படுத்தப்பட்டு சமூக இடைவெளியுடன் மதுபானம் விற்பனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com