
திருவாடானையில் அரசுப் பள்ளியில் பயிலும் 188 மாணவர்களுக்கு அந்த பள்ளியின் ஆசிரியர்கள் கரோனா நிவாரணப் பொருள்களை வழங்கியுள்ளனர்.
திருவாடானையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது இங்கு சுமார்150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தற்போது கரோனோ வைரஸ் பரவலை அடுத்து ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமலில் உள்ள நிலையில் பள்ளி கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதனால் இங்குக் கல்வி பயிலும் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகி வருவதால் ஆசிரியர்கள் மற்றும் நாட்டு நல பணித்திட்டம் ஆகியோர் ஒன்றிணைந்து தங்கள் சொந்த செலவில் ஒரு மாணவனின் குடும்பத்திற்கு அரிசி, சமையல் எண்ணெய், மளிகை பொருட்கள் உள்படத் தொகுப்பு 188 மாணவர்களுக்கு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்களே உதவியது வரவேற்பு ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் வள்ளுவன் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.