வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதன் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு


சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதன் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

14ம் தேதி - தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 - 50 கிலோ மீட்டர் வரை வீசக் கூடும்.
15ம் தேதி - தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 - 55  கிலோ மீட்ட வரையிலும், அவ்வப்போது 65  கிலோ மீட்டர் வரை வீசக் கூடும்.

16ம் தேதி - மத்திய தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 - 65 கி.மீ. வரையிலும் அவ்வப்போது 75 கி.மீ. வரையிலும் வீசக் கூடும்.

அந்தமான், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 - 50 கி.மீ. வேகத்தில் வீசக் கூடும்.

17ம் தேதி - மத்திய மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் கடும் சூறாவளி காற்று மணிக்கு 65 - 75 கி.மீ. வரையிலும் அவ்வப்போது 85 கி.மீ. வரையிலும் வீசக் கூடும். அந்தமான் பகுதிகளில் சூறாவளி காற்ற மணிக்கு 40 - 50 வரை வீசக் கூடும்.

18ம் தேதி - மத்திய மேற்கு மற்றும் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் கடும் சூறாவளி காற்று மணிக்கு 75 - 85 கி.மீ. வரையிலும் அவ்வப்போது 95 கி.மீ. வரையிலும் வீசக் கூடும்.

மேலும், வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 - 50 கி.மீ. வரை வீசக் கூடும்.

கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் 14ஆம் தேதி முதல் இப்பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

வட தமிழகத்தில் வரும் 16ம் தேதி முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 - 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com