திருவாடானையில் வெளிமாநிலத்தவர் சொந்த ஊருக்கு நடைப்பயணம்

திருவாடானையில் வடமாநிலத்தைச் சேர்ந்த புலர் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு நடைப்பயணம் மேற்கொண்டனர். 
திருவாடானையில் வெளிமாநிலத்தவர் சொந்த ஊருக்கு நடைப்பயணம்
Published on
Updated on
1 min read

திருவாடானையில் வடமாநிலத்தைச் சேர்ந்த புலர் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு நடைப்பயணம் மேற்கொண்டனர். 

திருவாடானை அருகே சி கே மங்கலத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் கரோனா தீநுண்ணி பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவால் பணிக்குச் செல்ல முடியாமல் பசியால் ப வாடி வருகின்றனர். எனவே தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தித் தக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து நடைப்பயணமாக திருவாடானை வட்டாட்சியரைச் சந்தித்தனர்.
திருவாடானை அருகே சி கே மங்கலத்தில் தனியார் நூற்பாலை இயங்கி வருகிறது.

இதில் ஜார்கண்ட், பீகார், ஒடிசா, போன்ற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் தங்கள் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். தற்போது கரோனா தீநுண்ணி பரவலைத் தடுக்கும் பொருட்டு தற்போது ஊரடங்கு உத்தரவு நாடுமுழுவதும் அமலில் உள்ளதால்  தனியார் நூற்பாலை இயங்காமல் உள்ளது. அதனால் இரண்டு மாதங்களாக வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு சம்பளமும் வழங்கப்படவில்லை, மேலும் உணவு கிடைக்காமல் பசியால் அவதிப்பட்டு வருவதால் இங்கு வசிக்கும் வெளிமாநிலத்தவர் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கோரி  தனியார் மில்லை விட்டு வெளியே வந்த 50க்கும் மேற்பட்டோர் நடந்து வட்டாட்சியரை சந்திக்க திங்கள் கிழமை மாலை திருவாடானைக்கு வர முற்பட்டனர்.

தகவலறிந்த திருவாடானை வட்டாட்சியர் மாதவன் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் சொந்த ஊருக்குச் செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com