திருவாடானை வேளாண் துறை மூலம் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு டிராக்டர் வழங்கல்

திருவாடானை வேளாண் துறை மூலம் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு டிராக்டர் வழங்கல்

திருவாடானையில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்குப் பண்ணை இயந்திரங்கள் வழங்கினார்கள்.
Published on

திருவாடானையில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்குப் பண்ணை இயந்திரங்கள் வழங்கினார்கள்.

திருவாடானை ஒன்றியத்தில் 4 உழவர் உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளது. இந்த சங்கமானது 100 உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும். அதில் விவசாயிகள் அனைவரும் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்த விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில்  விவசாயத்தை உரியக் காலத்திற்குள் செய்ய ஏதுவாக பன்ணை பொருட்கள் வாங்க ஏதுவாக ஒரு சங்கத்திற்கு அரசு சார்பில் ரூபாய் ஐந்து லட்சத்தை முதலீடாக வழங்குகிறது.

அதை வைத்து உழவர் உற்பத்தியாளர் சங்கத்தினர் தங்கள் பகுதியில் விவசாயத்திற்குத் தேவையான பண்ணை பொருட்களை வாங்கிக்கொண்டு விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே நோக்கமாகும். அதன்படி செவ்வாய்க்கிழமை திருவாடானை வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விவசாயத்திற்குத் தேவையான டிராக்டர் மூன்றினை விவசாயிகளுக்கு வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

இதில் துணை இயக்குனர் கன்னையா தலைமை வகித்தார், விவசாய உதவி இயக்குநர் கருப்பையா முன்னிலை வகித்தார். இதில் டிநாகனி, தேளூர், கொடிப்பங்கு கிராமங்களின் உழவர் உற்பத்தியாளர்கள் குழுவிற்கு டிராக்டர் வாகனம் வழங்கப்பட்டது. உடன் ஏராளமான விவசாயிகள் மற்றும் விவசாயத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com