பவானி கூடுதுறை மூடப்பட்டதால் புரோகிதர்கள் தவிப்பு

தென்னக அளவில் புகழ்பெற்ற பரிகாரத் தலமான பவானி கூடுதுறை மூடப்பட்டுள்ளதால் புரோகிதர்கள் வருவாயின்றி சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
பவானி கூடுதுறை மூடப்பட்டதால் புரோகிதர்கள் தவிப்பு

தென்னக அளவில் புகழ்பெற்ற பரிகாரத் தலமான பவானி கூடுதுறை மூடப்பட்டுள்ளதால் புரோகிதர்கள் வருவாயின்றி சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

காவிரி, பவானி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமுத நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் நாள்தோறும் பரிகார பூஜைகள் நடைபெற்று வருவது வழக்கம். திருமணத் தடை, நாக தோஷம், புத்திர தோஷம் உள்பட பல்வேறு தோஷ நிவர்த்தி பூஜைகள் நடைபெறும்.

மேலும், இறந்தவர்களின் அஷ்திக்கு இறுதிச் சடங்குகள் செய்து ஆற்றில் விடுதல், மூத்தோருக்கு திதி, பிண்டம் வைத்தல் உள்ளிட்ட வழிபாடுகளும் செய்யப்படும். மேலும், பவானி கூடுதுறையில் புனித நீராடி வழிபட்டால் தீமைகள் விலகி நன்மைகள் பிறக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.

இதுகுறித்து, பவானி கூடுதுறை புரோகிதர்கள் பிராமண நலச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.ஜெயப்பிரகாஷ் கூறியது:

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மார்ச். 17-ம் தேதி கூடுதுறை மூடப்பட்டது. இதனால், பரிகாரம் மற்றும் புரோகிதத் தொழிலில் ஈடுபட்டு வந்த 50-க்கும் மேற்பட்டோர் வருவாயின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

திதி, பரிகாரம் மற்றும் கிரியைகள் செய்வதற்குப் பிற தொழில்களுக்கு அரசு அறிவித்துள்ள சமூக இடைவெளியைப் பின்பற்றி நடத்த அனுமதி வழங்க வேண்டும். ஒரு பூஜைக்கு இருவர் மட்டுமே பங்கேற்கும் வகையில் கட்டுப்பாடுகளுடன் பங்கேற்கச் செய்யலாம்.

எதிர்வரும் காலங்களில் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் புரோகிதத் தொழிலில் ஈடுபட்டு வருவோரையும் இணைக்க வேண்டும். மேலும், தமிழகம் முழுவதும் புரோகிதத் தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

சங்க நிர்வாகிகள் வி.ஸ்ரீதர், பொருளாளர் எஸ்.கணபதி, ராஜன் செல்லப்பாட, எஸ்.நாகமணி, என்.வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com