

தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
கோவை - மயிலாடுதுறை, மதுரை - விழுப்புரம், திருச்சி - நாகர்கோவில், கோவை-காட்பாடி ஆகிய வழித்தடங்களில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஏற்கெனவே, இந்தத் தடங்களில் ரயில்களை இயக்குமாறு தமிழக அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று ரயில்வே வாரியம் இந்த ஒப்புதலை அளித்துள்ளது.
பொது முடக்கம் காரணமாகத் தடை செய்யப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவை தமிழகத்தில் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை தவிர்த்து சில தடங்களில் சிறப்பு ரயில் போக்குவரத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.