
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிடும் என தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட செயலாளர்களுடன் கலந்துரை நிகழ்ச்சி திங்கள்கிழமை சென்னையில் நடைபெற்றது.
இதில் பேசிய கமல்ஹாசன், கூட்டணி என்பது என் வேலை, வெற்றிக்கு எல்லாரும் உழைக்க வேண்டும், நம் கூட்டணி மக்களுடன்தான் என தெரிவித்துள்ளார்.
திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்க இருக்கிறது என பேசப்பட்ட நிலையில் கமல்ஹாசனின் அறிவிப்பு அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.