கரோனா விழிப்புணர்வு ஆன்லைன் கேம்: சென்னை ஐ.ஐ.டி. அறிமுகம்

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுடப் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களால் கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 'ஐஐடிஎம் கோவிட் கேம்' என்ற ஆன்லைன் விளையாட்டை உருவாக்கியுள்ளனர். 
ஐஐடிஎம் கோவிட் கேம்
ஐஐடிஎம் கோவிட் கேம்

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுடப் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களால் கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 'ஐஐடிஎம் கோவிட் கேம்' என்ற ஆன்லைன் விளையாட்டை உருவாக்கியுள்ளனர். 

இந்த விளையாட்டை கணினி, மடிக்கணினி மற்றும் செல்லிடப்பேசி மூலமாக எளிதில் விளையாடலாம். மேலும் ஆங்கிலம், அசாமி, பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய 12 மொழிகளில் இந்த விளையாட்டை விளையாட முடியும்.

இந்த விளையாட்டு குறித்து ஐ.ஐ.டி வேதியியல் பொறியியல் துறையை சேர்ந்த ப்ரீத்தி அகலயம் கூறுகையில்,

ஐ.ஐ.டி.எம் கோவிட் விளையாட்டு ஒரு சிறிய விளையாட்டு. இந்த விளையாட்டை மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கியுள்ளனர். 

ஜனவரி-மே 2020 செமஸ்டரில் வழங்கப்பட்ட 'லெட்ஸ் ப்ளே டு லர்ன்' என்ற பாடத்திட்டத்தை அடிப்படையில் மாணவர்களால் இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டது, இதில் மாணவர்களுக்கு விளையாட்டு அடிப்படையிலான கற்றல் கருவிகள் மற்றும் நுட்பங்கள் கற்பிக்கப்பட்டன.

இந்த விளையாட்டு பிரபலமான 'சூப்பர் மரியோ' விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதில் தேவைப்படும் விஷயங்களாக முகமூடிகள், கைகளை கழுவுதல் உள்ளன மற்றும் தவிர்க்க வேண்டிய விஷயங்களாக கைக் கழுவுதல், அணைத்துக் கொள்ளுதல் போன்றவை உள்ளன.

தேவைப்படும் விஷயத்தை பிடித்தால் ஒரு புள்ளி சேர்க்கப்படும், தேவையில்லாத விஷயங்களில் இருந்து குதித்து தப்பிக்காமல் பிடித்தால் ஒரு புள்ளி கழிக்கப்படும்.

இந்த விளையாட்டு இலவசமாக www.letsplaytolearn.com  என்ற வலைதளத்தின் முகப்புப் பக்கத்தில் மற்றும் ஐ.ஐ.டி. மெட்ராஸ் வலைதளத்திலும் விளையாடலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com